Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை, ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார் .
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜப்பானியப் பிரதமர் அபேயும் கடந்த 06ஆம் திகதி அதியுயர் மட்ட கூட்டமொன்றை நடத்தினார். இதன்போது, முழுமையான பங்குடைமையின் கீழ், பின்வரும் பல்வேறு பரிமாணம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்க தீர்மானித்தனர்.
1. இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல்.
]பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசாங்கம் இலங்கையில் முதவீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, நல்லாட்சி மற்றும் வெளிப்பாட்டுத் தன்மையூடாக ஜப்பானிய கட்டமைப்புகளின் முதலீட்டை கவரும் என்றார்.
2. இலங்கை தேசிய அபிவிருத்தி திட்டத்துக்கு ஒத்துழைப்பு
தரமான 'உட்கட்டமைப்புக்கான பங்குடைமை'யின் கீழ் இலங்கையின் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்கு இரண்டு நாடுகளுடம் தொடர்ந்து ஒத்துழைக்கும் என இரு தலைவர்களும் மீள வலியுறுத்தினர்.
3. தேசிய நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்த்தெடுத்தலும்
பிரதமர் ரணில், புதிய அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பாக பெரும் அக்கறையில் பிரதமர் அபேக்கு, விளக்கமளித்தார். விசேடமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் அவசரமான சமூக, பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை பாராட்டினர்.
4. அரசியல் கலந்துரையாடல் மாறும் கடல் ஒத்துழைப்பு
கடல் சார்ந்த நாடுகளின் தலைவர்கள் என்ற வகையில் பெருங்கடலில் கப்பல் போக்குவரத்து, விமானப்போக்குவரத்து என்பனவற்றுக்கு சுதந்திரத்தையும் சிவில் விமானபாதுகாப்பு, சட்டமுறையான வர்த்தகத்துக்கு தடையின்னை, பிரச்சினைகளை பேசித்தீரமானித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இருதலைவர்களுடம் மீள வலியுறுத்தினர்.
5. மனித மூலவள அபிவிருத்தியும் மக்கள்-மக்கள் இடையிலான உறவும்
இரண்டு நாட்டு மக்களிடையேயும் பரஸ்பர நம்பிக்கை புரிந்துணர்வு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான உறுதியான அத்திபாரம் இடல் என்பனவற்றை, இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தினர். இதற்கமைய, 2016ஆம் ஆண்டில், 1,800 இலங்கை உத்தியோகஸ்தர்களுக்கு ஜப்பான் பயிற்சி வழங்குமென்று பிரதமர் அபே தெரிவித்தார்.
6. சர்வதேச புலத்தில் ஒத்துழைப்பு
நியூயோர்க் அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமாக பங்குபற்றுதல் ஊடாக ஐ.நா.பாதுகாப்பு சபையை விரைவில் சீர்திருத்துவது தொடர்பில், ஒத்துழைப்பை அதிகரிக்கப்போவதாக, இரு தலைவர்களும் உறுதி செய்தனர். பாதுகாப்பு சபையில் நிரந்திர உறுப்பனராகும் தனது முயற்சிக்கு இலங்கை வழங்கும் தொடர்ச்சியான ஆதாவுக்கு பிரதமர் அபே நன்றி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025