2025 மே 19, திங்கட்கிழமை

சோமவன்ச, வீரவன்ச விரைவில் சந்திப்பர்

Gavitha   / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)  முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும், கட்சியின் முன்னாள் பிரசார செயலாளரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்சவும் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் யோசனைத் திட்டம் மற்றும் இலங்கையை சிக்க வைக்கும் காலனித்துவ ஆட்சியாளர்களின் முயற்சி குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரியவருகின்றது.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படக் கூடும் என்றும் அறியமுடிகின்றது.

ஜெனீவா தீர்மானத்துக்கு தேசிய சுதந்திர முன்னணி எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. சோமவன்ச அமரசிங்கவும் இந்த  இந்த தீர்மானத்தினை எதிர்த்து வருகின்றார். இந்நிலையிலேயே இவ்விருவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக அறியமுடிகின்றது.

ஜே.வி.பி.யின் தலைவராக சோமவன்ச இருந்தபோதே, விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X