2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பனாமா ஆவணம்: இலங்கையர்கள் குறித்து சரியான உறுதிப்படுத்தல் இல்லை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 13 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டிலுள்ள இரகசியக் கணக்குகள், சொத்துகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ள பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து சரியா உறுதிப்படுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்தார். 

மத்திய வங்கிக் கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது உரையாற்றிய ஆளுநர், மேற்படி ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களின் பெயர்கள் தொடர்பான உண்மைத்தன்மையை அறிய முடியாதுள்ளதாகக் கூறினார். 

பனாமா ஆவணங்கள் என அழைக்கப்படும் இந்தக் கசிவு மூலமாகப் பெறப்பட்டு ஆவணங்களில் சிக்கியுள்ளவர்களில் எத்தனை பேர் சட்டரீதியற்ற முறையில் வரி ஏய்ப்புக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவே பணத்தை வெளிநாடுகளில் கொண்டிருந்தார்கள் என்பது வெளிப்படுவதற்கு, சிறிது காலமெடுக்கலாம். ஆனால், சிக்கியுள்ளவர்களில் கணிசமானோர், தவறுகளை மறைப்பதற்கே இவ்வாறு செயற்பட்டுள்ளனர் என, இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ள கடன் குறித்து, தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X