2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'சமூக, பொருளாதார முன்னேற்றத்தை கட்டியெழுப்புவோம்'

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 13 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, மானிட கௌரவத்தைப் பாதுகாக்கும், கலாசாரப் பல்வகைத் தன்மையை மதிக்கும் ஐக்கியம் மிகுந்த மக்களாக, இவ்வாண்டின் தமிழ் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடக் கிடைத்தமையானது இலங்கையரான நாம் அனைவரும் பெற்றுக்கொண்ட பாக்கியமாகும்' என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

தமிழ் - சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் மக்களுக்காக, பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'பாக்கியம் மிகுந்த சித்திரை மாதத்தில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் சூரியத் திருவிழாவானது, இயற்கைக்கும் மனிதனுக்கும் மத்தியில் காணப்படும் அன்னியோன்ய உறவை அர்த்தமிக்கதாக மாற்றக் கூடிய, சூரியபகவான் முதலான முழு இயற்கைக்கும் நன்றியைத் தெரிவிக்கும், தேசிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் செழுமைப்படுத்தும் மிகப் பெரிய கலாசாரத் திருவிழாவாகக் காணப்படுகிறது. புதிய அபிலாஷைகள், மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளக் கிடைக்கும் சிறப்பான சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

'தற்போது அனைவருக்கும் சுதந்திரமாக புத்தாண்டைக் கொண்டாடக்கூடியதொரு சூழல் நாட்டிலே உருவாகியுள்ளது. அதற்காக வேண்டி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்கிறேன்' என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

'பெற்றுக்கொண்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கட்டியெழுப்பும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டத்தோடு ஒன்றிணைந்து செயற்படவும் இப்புத்தாண்டில் உறுதிபூணுவோம். அனைத்து இலங்கையருக்கும் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த சுபீட்சம் மிக்கதாக இப்புத்தாண்டு அமையட்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X