2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

2021இல் வழங்கப்பட்ட மதுபான அனுமதிகள்

Freelancer   / 2022 ஜனவரி 08 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2021ஆம் ஆண்டு 150 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மதுவரித் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிகமாக 81 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

மேலும், கடந்த வருடம் பல்பொருள் அங்காடிகளுக்கு 69 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.

இருப்பினும், 2015 முதல் வழக்கமான மதுபானக் கடைகளை (நகரங்களில்) திறக்க ஒரு அனுமதிப்பத்திரம் கூட வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மதுபான விற்பனை நிலையங்களில் மதுபான போத்தல்களில் ஸ்டிக்கர்கள் அல்லது டிஜிட்டல் அடையாளங்கள் ஒட்டும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் எனவும் மதுபான தொழிற்சாலைகளில் மதுபான போத்தல்களில் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதிக்கு பின்னர் உள்ளூர் சந்தையில் ஸ்டிக்கர்கள் அல்லது டிஜிட்டல் அடையாளங்கள் இல்லாத மதுபான போத்தல்கள் இருக்காது எனவும், வரியற்ற மற்றும் தரமற்ற மதுபான போத்தல்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

சுமார் ஏழு சதவீதமான தரமற்ற மதுபான போத்தல்கள் சந்தையில் கிடைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .