2025 மே 15, வியாழக்கிழமை

2024 (2025) O/L மாணவர்களுக்கான அறிவித்தல்

S.Renuka   / 2025 மே 15 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் அழகியல் பாட செய்முறைத் பரீட்சை  எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக 1,228 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இரண்டு பரீட்சைகளின் மதிப்பெண்களும் பாடங்களின் இறுதி முடிவுகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுவதால், மாணவர்கள் எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்குத் தோற்றுவது கட்டாயம் என்று பரீட்சைத் திணைக்களம் கூறுகிறது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .