2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

2025 இல் இதுவரை 66 துப்பாக்கி சூடு

Editorial   / 2025 ஜூலை 11 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாடு முழுவதும் 66 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 48 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையேயான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஆகும். இவற்றில் 37 பேர் இறந்துள்ளனர், 37 பேர் காயமடைந்துள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் பிரிவில் மட்டும், கடந்த இரண்டரை மாதங்களில் பாணந்துறை தெற்கு மற்றும் ஹிரான பொலிஸ் பிரிவுகளில் ஐந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான குடு சலிந்து, பாணந்துறை நிலங்கவுக்கு இடையிலான பகை காரணமாக பாணந்துறையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்ததாக பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .