Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் டிசம்பர் 8 முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைத் திகதிகளும் குறிப்பிடப்பிட்டுள்ளன. அதற்கமைய புதிய ஆண்டின் முதல் தவணை 2026 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 hours ago