Janu / 2026 மார்ச் 24 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் செவ்வாய்க்கிழமை (24) முதல் ஏப்ரல் 24, வரை இணையதளம் ஊடாக மாத்திரமே தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறைமை
அனைத்து விண்ணப்பதாரர்களும் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
பாடசாலை விண்ணப்பதாரர்கள்: அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லை (Password) பயன்படுத்த வேண்டும்.
தனியார் விண்ணப்பதாரர்கள்: தனிப்பட்ட ரீதியில் இணையதளம் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்வதற்குத் தமது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.
முக்கிய அறிவுறுத்தல்கள்
விண்ணப்பங்களை இணையதளம் ஊடாக சமர்ப்பித்த பின்னர், பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இருவரும் அதன் பிரதியொன்றை (Printout) எடுத்து, எதிர்கால தேவைகளுக்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எக்காரணம் கொண்டும் காலக்கெடுவுக்குப் பின்னரான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதால், ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
41 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago
1 hours ago