2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘2030 இல் சகலருக்கும் தூய குடிநீர்’

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடெங்கும் பரவலாக காணப்படும் சமூக நீர் வழங்கல் கருத்திட்டங்களை பலப்படுத்தி, கஷ்டப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், சகலருக்கும் தூய குடிநீர் என்னும் நிலைபேறான அபிவிருத்தியை அடைவதற்கும், துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தை பலப்படுத்தி, கஷ்டப் பிரதேசங்களில் அதன் சேவையை பரவலாக்கும் நோக்கில், உலக வங்கியின் உதவியுடன் அத்திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு, மோட்டார் சைக்கிள்களை  வழங்கி வைக்கும் நிகழ்வில்  உரையாற்றுகையிலேயே, அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

2030 ஆம் ஆண்டில் சகலருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் மிலேனியம் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு, தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய நீர் வழங்கல் திட்டங்களுடன், இக்கருத்திட்டங்களையும் பலப்படுத்துவதன் மூலம் சாத்தியமாகலாம் என எண்ணுவதாக குறிப்பிட்டார்.

மேலும், சமூக அடிப்படையிலான அமைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் அவர்களின் முதலீடுகளுக்கு உதவி வழங்கும் நோக்கில் உலக வங்கியினூடாக கடன் திட்டமொன்றை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்ச​ர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .