2024 மே 15, புதன்கிழமை

21055 டெங்கு நோயாளர்கள் பதிவு

Freelancer   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்து 55 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 532 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,936 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .