2026 மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை

22 பெண்களை மணந்த கல்யாண ராமன்... சிக்கியது எப்படி?

S.Renuka   / 2026 மார்ச் 15 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 22 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண மன்னன் பொலிஸாடம் வசமாக சிக்கியிருக்கிறார். 

கணவனை இழந்த பெண்களை குறிவைத்து கல்யாண மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த நபர் மீது பொலிஸ் எடுத்த நடவடிக்கை என்ன?

அவர் ஊருக்கு ஒரு மனைவி, மாவட்டத்திற்கு ஒரு மனைவி, வருடத்திற்கு ஒரு கல்யாணம் என ஹனிமூனிலேயே காலம் கடத்தியிருக்கிறார் இந்த 56 வயதான கேரளத்து கல்யாண ராமன்.

பொண்டாட்டிகளுக்கு போண்டா டீ வாங்கிக் கொடுக்கவே வருமானம் பத்தாது என்ற சூழலிலும், திருட்டு நகைகளைப் போட்டு அழகு பார்க்க நினைத்தவர் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் வசமாக சிக்கியது எப்படி?

திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 7 பவுன் தங்க சங்கிலியை பாகுலேயன் பறித்துச் சென்றுள்ளார். 

இது குறித்த புகாரின்பேரில் ஆற்றிங்கல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

விசாரணையில், திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த 56 வயதான பாகுலேயன்தான் திருடியது என்பதை கண்டுபிடித்தனர்.

அவரை மடக்கிப்பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது மனைவிக்காக நகைப் பறிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். அப்படியானால் உனது மனைவியையும் விசாரிக்க வேண்டும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

அதற்கு எந்த மனைவியை விசாரிக்கப் போகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்படியானால், உனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்களா? என பொலிஸார் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அளித்த பதிலைக் கேட்டு பொலிஸாருக்கு பொறி ஏறியிருக்கிறது. மாவட்டத்திற்கு ஒரு மனைவி என 22 மனைவிகள் தனக்கு இருப்பதாக அவர் கூற அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போயுள்ளனர்.

அதாவது பாகுலேயன் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்கள் என கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்திருக்கிறார்.

ஒரு ஊரில் சுந்தரம் என்றால், மற்றொரு ஊரில் விஜயன், வேறொரு ஊரில் பாபு என ஊருக்கு ஒரு பெயரை வைத்துக்கொண்டு தனது உருட்டு வேலையை அரங்கேற்றியிருக்கிறார். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X