2026 மே 06, புதன்கிழமை

24 மணித்தியாலங்களில் 25 கொரோனா சாவுகள்

Niroshini   / 2021 மே 07 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், நாட்டுக்குள் 25 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்நாட்டுக்குள் இடம்பெற்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கை, அன்றைய தினம் நள்ளிரவு வரையில், 734ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பதிவாகியுள்ள மரணங்களில் பெருமளவானவை, கொவிட் நியூமோனியாவால் ஏற்பட்டவை என்று, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில், பொலன்னறுவை - அரலகன்வில பகுதியைச் சேர்ந்த, 35 வயதுப் பெண்ணொருவரும் அடங்குகின்றார்.

தவிர, கோங்கஹாவெல, தியத்தலாவ, மாலபே, மஹரகம, அரநாயக்க, வல்கம்முல்ல, வேயங்கொட, தளுபொத்த, மொரட்டுவ, குருநாகல், வஸ்கடுவ, ஹிங்குரக்கொட, கோணபல, புளத்கொஹுபிட்டிய, தெவனகல, கல்லேல்ல, திரப்பனே, வத்தளை, களுத்துறை தெற்கு, பயாகல, பேராதனை, குரன, தும்மலசூரிய, மற்றும் கிரிபத்கும்புர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42 முதல் 87 வயதுக்கிடைப்பட்டவர்களே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .