2026 மே 06, புதன்கிழமை

’27%ஆல் கேஸ் விலை அதிகரிப்பு’

Niroshini   / 2021 மே 07 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் எரிவாயு மோசடியொன்று இடம்பெற்று வருகின்றது என்பதை எடுத்துரைப்பதற்காக, எரிவாயு சிலிண்டரொன்றை ஊடகச் சந்திப்புக்கு எடுத்துவந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம், 27 சதவீதத்தால், எரிவாயுவில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதெனச் சாடினார்.

மக்களுக்குத் தெரியாமல், மக்கள் கண்டுபிடிக்காத வகையில், இந்த விலையேற்றத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதென, கொழும்பில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போது தெரிவித்த அவர், முன்னர் கிலோகிராமாக விற்பனை செய்யப்பட்ட எரிவாயு, தற்போது லீற்றராக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பில் சரியாகவும் முறையாகவும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்து, 27 சதவீத விலை அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்த கபீர் எம்.பி, உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாத நிலையிலேயே, இலங்கை மக்கள் இந்த விலை அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .