Niroshini / 2021 மே 07 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்ப்பமடைந்து 28 வாரங்கள் கடந்த நிலையிலுள்ள கர்ப்பிணியொருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காவாராயின், அது பாரிய விளைவை ஏற்படுத்துமென்று, காசல் வீதியிலுள்ள மகளிர் மருத்துவமனையின் சிரேஷ்ட விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது தொடர்பில், கொழும்பில் நேற்று (06) நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கர்ப்பிணியொருவர் கர்ப்பமடைந்து 28 வாரங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுமாயின், அதற்கான அறிகுறிகள் எவையும் காண்பிக்காது என்றும் பிசிஆர் பரிசோதனையில் மாத்திரமே தொற்றை உறுதி செய்துகொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தக் காலப்பகுதியில், கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்கள் பாதிக்கப்படுவதும் மிகக் குறைவாகும். எவ்வாறெனினும், கர்ப்பமடைந்து 28 வாரங்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், சில சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
“இக்காலப்பகுதியில், கர்ப்பிணிகளுக்குக் கொரோனா அறிகுறிகள் ஏதும் தென்பட்டால், உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றும், விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
25 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
43 minute ago