2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

3 சிறுவர்களும் பாதுகாப்பாக மீட்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்ஸையில் நேற்று  கடலில் குளிக்கச் சென்று காணாமல் போயிருந்த மூன்று சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கடல் நீரோட்டத்தில் சிக்கிய சிறுவர்களை பாதுகாப்பாக மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும், 16 வயதுடையவர்கள் எனவும், வெல்லம்பிட்டிய, கட்டுக்குருந்த மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலத்த கடல் அலைகள் காணப்படும் போது பொதுமக்கள் கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X