2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

3 நாள்களில் 1754 பேர் கைது; 447 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன

Editorial   / 2020 மார்ச் 23 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

​கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக வௌ்ளிக்கிழமை (2) மாலை 6 மணியிலிருந்து இன்று (23) காலை 6 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தடையுத்தரவை மீறிய,  1754 பேர் நாடு முழுவதிலிமிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள், ஓட்டோ உள்ளிட்ட 447 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் அதிகமானோர் வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் மைதானத்தில் ஒன்று கூடி மதுபானம் அருந்தியமை, வாகனங்களில் பயணித்தமை,மதுபோதையில் வீதிகளில் நடமாடியமை, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே 1754 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .