Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 23 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால், 2,788 குடும்பங்களைச் சேர்ந்த 9,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகவும் இன்னுமிரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 1,829 குடும்பங்களைச் சேர்ந்த 5,775 பேர், 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,414 குடும்பங்களைச் சேர்ந்த 4,443 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1347 குடும்பங்களைச் சேர்ந்த 4,633 பேரும் மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago