2025 மே 03, சனிக்கிழமை

3 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி

R.Maheshwary   / 2021 மே 30 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கையானது, இன்று யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களின் அவதானமிக்க வைத்திய பிரிவுகளை அடிப்படையாக வைத்து, சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் குண்டசாலை- பண்டாரநாயக்க தேசிய பாடசாலை மற்றும் மெனிக்கின்ன- பிலவல மஹா வித்தியாலயத்திலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டி ஜனாதிபதி வித்தியாலயம், கும்புகொடஆர- ரத்தனாகம விகாரையிலும் இடம்பெறுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதேப்போல் யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 மத்தியநிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X