2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

35 வது ’’கறுப்பு அக்டோபர்’’ நினைவேந்தல்

Editorial   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

வடக்கில் இருந்து முஸ்லிம்கள்,  தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு  35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு அக்டோபர்  அனுஷ்டிக்கப்பட உள்ளது.

விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் ”கறுப்பு ஒக்டோபர்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கவுள்ள நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பே ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை(18) அன்று மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வில் கல்வியாளர்கள்,தமிழ் சிங்கள சிவில் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர்.அத்துடன் எக்ஸத் ஊடக வலையமைப்பு இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் பிரதம விருந்தினராக யாழ். சிவில் மத்திய நிலைய தலைவர் அருண் சித்தார்த் கலந்து கொள்ளவுள்ளார்.

எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம்  ஷாஜஹான் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம்  முஜிபுர் ரஹ்மான், நிந்தவூர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவரும் முன்னாள்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜௌபர், முன்னாள்  இராணுவ மேஜர் ஜூனைட் நபீர், கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் யு.எல் அப்துல்லாஹ், தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் யு.எல்.எம்  முபீன், யாழ் முஸ்லிம் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான பி.எஸ்.எம்  ஷாபுல் அனாமும் விசேட அதிதிகளாக ,காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ அப்துல் கபூர் மதனி ,காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் உப செயலாளர் எம்.ஐ.எம். இர்பான் ,அட்டாளைச்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல் சம்மேளன முன்னாள்  தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.  ஜூனைதீன், சம்மாந்துறை அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யா தலைவர் ஐ.எம் இப்ராஹிம், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம்  கலீல், காத்தான்குடி வர்த்தக சங்க தலைவர் கே.எல்.எம் பரீட் ,ஏறாவூர் வர்த்தக சங்க செயலாளர் எம்.ஐ.எம். நாசர் , ஓட்டமாவடி முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சி  நியாஸ்தீன், கல்முனை வர்த்தக சங்க செயலாளர் ஹமீட் எஸ்.லெப்பை ,வருகை தரவுள்ளனர்.

 'கறுப்பு அக்டோபர்' என்பது 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட துயர சம்பவத்தை குறிக்கிறது. இந்த நிகழ்வில் சுமார் 75,000 முஸ்லிம்கள் 24 மணி நேர அவகாசத்தில், சொத்துக்களை இழந்து, உடுத்திய உடைகளுடன் வெளியேற்றப்பட்டனர். இது முஸ்லிம்களால் 'கறுப்பு அக்டோபர்' என அழைக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X