2025 மே 09, வெள்ளிக்கிழமை

4,000 யை தாண்டியது ஜேஎன் 1 பாதிப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை (25) கொரோனா தொற்று 628 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,054ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4,50,09,248 (4.50 கோடி) ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,860 (4.44 கோடி) ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றுப் பரவலால் கேரள மக்கள் அச்சமடைய தேவையில்லையென அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X