Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து, அந்த அறிக்கையை விரைவில் சட்ட மா அதிபருக்குக் கையளிக்க, குற்ற விசாரணை திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேரக தெரிவித்தார்.
கண்டி பொலிஸ் தலைமையகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும், தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் அதற்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியவர்கள், தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்புடைய விசாரணைகளுக்கு, இன்னும் சில காலம் தேவைப்படுவதாகவும் எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் குறுகிய காலத்தில் குற்ற விசாரணை திணைக்களத்தால், பல தகவல்களை வெளிக்கொண்டு வர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago