2024 மே 04, சனிக்கிழமை

’4 க்கு பின்னாலும் கோட்டாவே இருந்தார்’

Freelancer   / 2024 ஏப்ரல் 25 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2005, ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும்  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும்  ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

5  வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி யார்?ஏன் இன்னும்  கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்விகள் இங்கு எழுப்பப்படுகின்றன. இலங்கையைப்பொறுத்த வரையில்  இலங்கையில் ஆட்சியாளர்களுடைய ஆசிர்வாதத்துடன் ஆட்சியாளர்களின் ஆலோசனைகளுக்கமைவாக  பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ் எம்.பிக்கள்.   சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் பல்வேறு ஆதாரங்கள், தடயங்கள் கிடைக்கப் பெற்றன. ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தண்டனை வழங்க முடியவில்லை என்றால் அது ஆட்சியாளர்களின் ஆலோசனைப்படி அந்தக்கொலைகள் நடைபெற்றன.

குறிப்பாக   2005,2006 ஆண்டு காலப்பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின்  செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனையில் அந்த இரு எம்.பி.க்களும் கொல்லப்பட்டார்கள்.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மிகபெரிய யுத்தம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பல நாடுகளின் உதவியுடன் மிகக்கொடூரமாக கொல்லப்பட்டார்கள். அப்போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய  இருந்தார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்  கத்தோலிக்க மக்களையும் அமெரிக்கா. பிரிட்டானிய சுற்றுலா பயணிகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டன என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .