Editorial / 2025 நவம்பர் 11 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் முத்து நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (11) அன்று இடம்பெற்றுள்ளது.
குழந்தை பிறந்து 42 நாட்கள் எனவும் இரவு குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்த தாய் செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை சிசுவை பார்த்த போது உயிரிழந்த நிலையில் குழந்தை இருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனாலும் உயிரிழந்த சிசுவின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முற்பட்டபோது அதனை மீட்ட சீனக்குடா பொலிஸார் சிசுவின் ஜனாஸாவை திருகோணமலை பொது வைத்திய சாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக ஒப்படைத்துள்ளது அறியமுடிகின்றது.
குறித்த சிசுவை எக்கோ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி கொண்டு வருமாறு மருத்துவர்கள் தமக்கு கூறியிருந்தாக பெற்றோர்கள் பொலிஸாரிடம் விசாரணையின் போது கூறியுள்ளனர்.
இருந்த போதிலும் சிசுவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025