S. Shivany / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்டுவரும் ரெபிட் என்டிஜன் பரிசோதனையை ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி தொடக்கம், எழுமாறாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதுவரை 61 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட 1369 பரிசோதனைகள் மூலம் 7 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வெளியேறும் 11 இடங்களில் மேற்படி ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
48 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago