Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
"நெருக்கடியான சூழ்நிலையில் தலைமறைவாகியிருந்த சில அரசியல்வாதிகளுக்கு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே கண்டி மாவட்ட மக்கள்மீது அக்கறைவந்துள்ளது.
அதுமட்டுமல்ல தற்போது இங்குவந்து 5 ஆயிரம் ரூபாயிலும் அரசியல் நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர்." என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார், இன்று (22) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் பரிசுப்பொருட்களுடன் சிலர் கண்டி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளனர். இப்போதாவது அவர்களுக்கு கண்டி மாவட்டம் ஞாபகம் வந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இவ்வாறு வந்தபின்னர் 5000 ரூபாய் என்ற கொரோனா அரசியலையும் இங்கு அரங்கேற்றிவருகின்றனர்.
கடந்த 25 நாட்களுக்கு மேலாக கண்டியில் கொரோனா கட்டுப்படுத்தல் செயலணி ஊடாக அரச சேவைகள் சீராக இடம்பெறுவதற்கான வழிநடத்தல்களை செய்துவருகின்றோம்.
5000 ரூபாய் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் சர்ச்சை நீடிக்கின்றது. அதற்கும் நிச்சயம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.
5 ஆயிரம் ரூபாய் என்பது எந்தவொரு கட்சி அல்லது நபர் சார்ந்தது அல்ல, மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவாகும் என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.
எனவே, நெருக்கடியான சூழ்நிலையில் வங்குரோத்து அரசியலை நடத்தாமல், மனிதநேய அடிப்படையில் மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago