2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

75 வயது முதியவர் முதலிரவில் மரணம் 35 வயது மணப்பெண் கூறிய ஒரு வார்த்தை

Editorial   / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சுமுச் கிராமத்தில் வசிப்பதென்று 75 வயது விவசாயி சங்க்ருராம் மர்மமான சூழ்நிலைகளில் தனது இரண்டாவது திருமணத்தின் அடுத்த நாள் காலை உயிரிழந்தார்.

இந்த அசாதாரண இறப்பு கிராம மக்களிடையே பல்வேறு ஊகங்கள் எழுவதற்கு காரணமாகியுள்ளது.ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவி இறந்ததன் பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த சங்க்ருராம், மீண்டும் திருமணம் செய்வதற்கு தனது குடும்பத்தினரால் தடை செய்யப்பட்டிருந்தார்.

இருப்பினும், நான் இரண்டாம் திருமணம் செய்தே தீருவேன் என்று தனது முடிவில் உறுதியாக இருந்த அவர், குடும்ப எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் முன்னேறி சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 29 அன்று ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் மன்பவதியை சங்க்ருராம் திருமணம் செய்துகொண்டார். முதலில் நீதிமன்றத்தில் திருமணப் பதிவு செய்யப்பட்டதோடு, அருகிலுள்ள கோயிலில் பாரம்பரிய ரீதிகளின்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.

இந்தத் திருமணம் குடும்ப உறவினர்கள் இல்லாமல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், முதலிரவு முடிந்த அதிகாலை சங்க்ருராமின் உடல்நலம் திடீரென மோசமடைந்தது. அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டும், அவரை காப்பாற்ற இயலவில்லை.

இந்த திடீர் இறப்பு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் இதன் பின்னணியில் பல்வேறு ஊகங்களை முன்வைத்து வருகின்றனர்.

இது குறித்து மணப்பெண்ணிடம் கேட்ட போது, இரவு நன்றாக தான் இருந்தார். ஆனால், அதிகாலையில் என்ன ஆனது என்றே தெரியவில்லை என சோகம் படர்ந்த முகத்துடன் கூறினார். மேலும், டெல்லியில் வசிக்கும் உறவினர்கள் இந்தச் செய்தியைக் கேட்டு விரைந்து வந்த பிறகே இறுதிச் சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது. மேலும் விவரங்கள் கிடைக்கும்போது தெரிவிக்கப்படும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X