2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

79 வயதான மனைவியை அடித்துக்கொன்ற 84 வயதான கணவன்

Editorial   / 2026 ஜனவரி 02 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

84 வயதுடைய கணவர் ஒருவர் தனது 79 வயதுடைய மனைவியை அடித்து கொலை செய்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அகலவத்தை, மஹாகம பகுதியைச் சேர்ந்த ஜி. நந்தவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து, சந்தேக நபர் கதவின் கைப்பிடியால் அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான 84 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X