2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

9 கோடி ரூபாயுடன் ஹெரோயின் கடத்தல்காரி கைது

Freelancer   / 2026 ஏப்ரல் 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 9 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபாய் பணத்தை இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்திருந்த போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய ஒரு கணக்கில் 7,37,62,939.95 ரூபாயும், மற்றொரு கணக்கில் 20,000,000 ரூபாயும் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .