2025 ஜூலை 16, புதன்கிழமை

CID என கூறி வாகனங்களை பரிசோதித்த இருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலனாய்வு பிரிவினர் எனக் கூறி, வாகனங்களை பரிசோதித்த இருவர், இன்று (18) மீகஹாதென்ன பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனரென, மீகஹாதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு நபருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரான இராணுவ வீரரிடமிருந்து இராணுவத்தில் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைகள் 3, 20,000 ரூபாய் பணம் உள்ளிட்ட ஆவணங்கள் சில மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொரகாதுவ வீதி சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையவே மீகஹாதென்ன பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் குறித்த இராணுவ வீரர,; கொம்பனித்தெரு இராணுவ முகாமின் சாரதியென்றும்  இங்கு கடமையாற்றும் பிரிகேடியர் ஒருவருக்கு சொந்தமாக, நெலுவ பிரதேச வீடொன்றில் தற்போது பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X