2024 மே 04, சனிக்கிழமை

Foxhill அனர்த்தம்: 2 சாரதிகளுக்கு விளக்கமறியல்

Editorial   / 2024 ஏப்ரல் 22 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியத்தலாவ நரியகந்தவில் இடம்பெற்ற “Foxhill Super Cross Race” கார் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான்  அன்டனி எஸ்.பீட்டர் ஃபால்ல் , திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.

தியத்தலாவ நர்யகந்த ஃபோக்ஸ்ஹில் மோட்டார் பந்தயத்தில் கலந்து கொண்டு பந்தய இலக்கம் 5-ன் கீழ் போட்டியிட்ட மாத்தறை மெதபாறை ஹித்தெட்டிய பிரதேசத்தை சேர்ந்த ரஞ்சித் உடுவிட்ட (36), பந்தய இலக்கத்தின் கீழ் போட்டியிட்ட பேராதனை மாகந்த பிரதேசத்தை சேர்ந்த ஏ.எம்.டிலான் சஞ்சீவ (47)  போட்டி இலக்கம் 196 ஆகிய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.    

  இவர்கள் இருவரும் தியத்தலாவ நர்யகந்த ஃபாக்ஸ்ஹில் கார் பந்தயத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) கலந்து கொண்ட போது இரு கார்களும் விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்து தியத்தலாவை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் அதில் சிலர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.  அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Foxhill வாகன விபத்தில் காயமடைந்த இரு போட்டியாளர்கள் தற்போது தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பண்டாரவளை நீதவான் அன்டனி எஸ்.பீட்டர் ஃபால் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை  (22) பிற்பகல் சென்று  இரண்டு போட்டியாளர்களும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த வார்டில் சோதனை செய்த பின்னர், சந்தேகத்திற்குரிய இரண்டு போட்டியாளர்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.எம்.உபுல் சந்தன பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹன பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வி.ருவன் பெர்னாண்டோ, தியத்தலாவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர தயாரத்ன உள்ளிட்ட அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .