2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

IPL காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது

Freelancer   / 2025 மே 09 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.  

இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நிறுத்தி வைக்கப்படும் ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகல் எப்போது நடைபெறும்? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்தி, மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) முடிவு செய்துள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X