2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

ISIS உறுப்பினர்களுக்கு உதவியவர் அதிரடி கைது; மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்

Freelancer   / 2024 மே 23 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ISIS உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான மொஹமட் நுஃப்ரான், பாரிய போதைப்பொருள் வியாபாரியான பொட்ட நௌபரின் இரண்டாவது திருமணத்தின் மகன் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை ISIS உறுப்பினர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த நான்கு நபர்களுடன் இந்நாட்டினுள் தொடர்பு வைத்திருந்த நபர்கள் தொடர்பில் ஏற்கனவே தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு விமான டிக்கெட் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி இரவு இண்டிகோ விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னை நோக்கி இலங்கையில் இருந்து புறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட மொஹமட் நுஃப்ரான் 40 தடவைகள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் மொஹமட் நுஸ்ரத் 38 முறை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மொஹமட் ரஸ்தீன் மற்றும் மொஹமட் பாரிஸ் ஆகியோர் முதல் முறையாக இந்தியா சென்றுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட நால்வரும் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் பாகிஸ்தானில் உள்ள ISIS அமைப்பின் தலைவரான அபுவுடன் தொடர்பில் இருந்த கைதானவர்கள், அன்றிலிருந்து தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் ஊடாக அவருடன் தொடர்பில் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களை குறிவைப்பதுதான் பயங்கரவாதிகளின் நோக்கம் என இந்திய தீவிரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X