2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'L' போர்டை பயன்படுத்தி அதிக வேகத்தில் பயணித்தால் சட்டநடவடிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக வீதிகளில் ' L' போர்டை காட்சிப்படுத்தியவாறு, அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் மேற்பார்வை பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பயணிப்பவர்களுக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாரதி பயிற்சிகளை வழங்கும் போது, அதிவேக வீதியில் பயணிப்பது தொடர்பான சட்டதிட்டங்கள் குறித்தும் சாரதி பயிற்சியில் உள்ளடக்குமாறு, மோட்டார் வாகனப் போக்குவரத்து  ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதியில் எவ்வாறு பயணிப்பது என்பது குறித்து, பல விடயங்கள் காணப்படுகின்ற நிலையில், தற்போது புதிதாக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுபவர்களுக்கு இது குறித்து போதிய தெளிவு இல்லையென்றும், இதனாலேயே அதிக விபத்துகள் இடம்பெறுவதாகவும்  அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் மேற்பார்வை பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X