Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலை சுகாதார சேவைகளின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ரணசிங்கவை ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.
முந்திய செய்தி....
2024 ஆம் ஆண்டு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தேசிய மனநல நிறுவனத்தின் (NIMH) பதில் பிரதி ஆணையாளர் டாக்டர் நயனஜித் ஹேமந்த ரணசிங்கவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) புதன்கிழமை (13) கைது செய்தது.
முன்னர் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பதில் பிரதி ஆணையாளராக பணியாற்றிய டாக்டர் ரணசிங்க, வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் கைதி ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ரூ. 1.5 மில்லியன் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த கைதி நோய்வாய்ப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
கோரிய லஞ்சத்தில் ரூ. 300,000 வழங்கப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிட்டகோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து புதன்கிழமை (13) காலை கைது செய்யப்பட்ட டாக்டர் ரணசிங்க கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .