2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

O/L முடிந்ததும் பஸ் சேவை முடங்கும்

Freelancer   / 2022 மே 25 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் சேவைகளில் இருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகள் என்பதால் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவில்லை என்றும் பஸ்களுக்கு உரிய டீசல் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எனினும், நுகேகொடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே1,000 ரூபாய் கப்பம் கோரப்பட்டதாகவும் இது தொடர்பில் பஸ் நடத்துனர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை எனவும் தெரிவித்தார்.

பயணிகள் பஸ்களுக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படாவிட்டால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பின்னர், தனியார் பஸ்கள் சேவையில் இருந்து முற்றாக விலகும் என அவர் எச்சரித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .