2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

OMP உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

Simrith   / 2024 மே 06 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் (OMP) உள்ள உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள், பாராளுமன்ற இணையத்தளமான www.parliament.lk இல் உள்ள செயலகம் எனும் பிரிவின் கீழ் விண்ணப்பத்தை தயார் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இது OMP க்கு உறுப்பினர்களின் நியமனம் என்ற தலைப்பில் விரைவான இணைப்புடன் உள்ளது.

"முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27 மே 2024 அன்று அல்லது அதற்கு முன் 'அரசியலமைப்பு சபையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்பு சபை - அலுவலகம், இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்குவோ அனுப்பப்பட வேண்டும்.

'OMP க்கு உறுப்பினர்களின் நியமனம்' என உறையின் மேல் இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயம் (Subject) எனுமிடத்தில் குறிப்பிடப்பட வேண்டும்" என்று குறித்த அறிக்கை கூறுகிறது.

இணைப்பு -  https://www.parliament.lk/ta/secretariat/advertisements/view/305


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X