2025 மே 03, சனிக்கிழமை

PCR தரம், கட்டணத்தை ஒழுங்குப்படுத்தும் சுகாதார அமைச்சு

R.Maheshwary   / 2021 மே 20 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பிரிவுகளால் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின்  தரம் மற்றும் கட்டணத்தை ஒழுங்குப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு பி.சி.ஆர் இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 1,500 பரிசோதனைகளையே முன்னெடுக்க  முடியும் என்ற நிலையில், சில தனியார் பிரிவுகளில்  5,000- 7,000 வரையான பரிசோதனைகளை முன்னெடுப்பதாகவும் சுகாதார அமைச்சின் வைத்திய சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதனால் பரிசோதனையின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த வாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அது தொடர்பில் கலந்துரையாடி, அது சம்பந்தமான சுற்றுநிருபத்தை வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனியார் பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அதிகமாக கட்டணம் அறவிடப்படுவதை நிறுத்துவது தொடர்பான சுற்றுநிருபத்தை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X