2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது. 

அந்நிலையில்  நேற்று (17) மாலை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்று இருந்தனர். 

அதன் போது, அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டனர்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X