Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஏப்ரல் 07 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
65,000 வீட்டுத்திட்டத்தை துரிதகதியில் அமுல்படுத்துவது தொடர்பில், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
06ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கலந்துரையாடலில், இக்கருத்திட்டதைத் துரித கதியில் அமுல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்தார்.
இது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர், அடுத்த அமைச்சரவை கூட்டத்துக்கு முன்பாக ஒன்றுக்கூடி, காணி விடயங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .