2025 ஜூலை 16, புதன்கிழமை

அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்து, இன்று (03) மஸ்கெலியா பிரவூன்ஸ்வீக் தோட்டத் தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 250 க்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டதோடு, தமக்கு இம்முறை அடிப்படை சம்பளம் 1000 ரூபாயை முதலாளிமார் சம்மேளனம் வழங்க வேண்டுமென்றும், நாட்டில் இன்று நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்வதால், தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் சிக்கல் காணப்படுவதாக, குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .