Editorial / 2021 மே 10 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றின் வேகம், அதிகரித்து கொண்டே செல்வதால் அடுத்தக்கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
இதனோர் அங்கமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றிரவு முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், நாட்டை முழுமையாக மூடுமாறு சுகாதார துறைகளை சார்ந்தோர், அரசாங்கத்தை வலியுறுத்திவருகின்றனர். எனினும், பொது முடக்கத்துக்கு செல்வதற்கு முன்னர், பொதுமக்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில், இன்றிரவுக்குள் முக்கியமான அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்றிரவு வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதிலேயே, இறுதித் தீர்மானம் எட்டப்படவிருப்பதாக அந்தக் தகவல்கள் தெரிவித்தன.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago