2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அத்தியாவசிய பொருட்களின் விலை மே முதல் அதிகரிப்பு?

Kogilavani   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல், பெறுமதி சேர் வரி (வட் வரி), 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படும் என்றும் இதனால் நுகர்வோர் மாத்திரமன்றி,சிறு மற்றும் மத்தியதர வியாபாரிகளும் பாதிக்கப்படுவர் என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதாரச் சேவைகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைகள் போன்று தகவல் தொடர்புப் பிரிவுகள், இந்த வட் வரியிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுட்டிக்காட்டி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமது அமைப்பினால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வட் வரி அதிகரிப்பு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வட் வரி அதிகரிப்பினால், தொலைபேசி, நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ மற்றும் தனியார் கல்;வி மீதான வரிகளும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X