2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

Mayu   / 2024 மே 22 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கப்பட்டுள்ளது.

நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 950.00 ரூபா,

பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ 40 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 250.00 ரூபா,

ஒரு கிலோ கடலை (பெரியது) 38 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 450.00 ரூபா,

ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் புதிய விலை 275.00 ரூபாவாகவும் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

குறித்த பொருட்களை வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் புதன்கிழமை (22) முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .