2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

அதிர்ச்சியளித்தார் சஜித்

Simrith   / 2024 மே 01 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு அதிர்ச்சிக்குரிய செயலாக, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைவர் சஜித் பிரேமதாச, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) குழுவுடனான சந்திப்பில், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியா சீனாவுக்குடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வந்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த CPC தூதுக்குழுவினருக்கும் அவரது கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது பிரேமதாச இவ்வாறான ஒரு வாய்ப்பை வழங்கியதாக இந்த சந்திப்பை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் டெய்லி மிரருக்கு தெரிவித்தது.

எவ்வாறாயினும், இலங்கை தனது அந்நிய உறவுகளில் எந்தவொரு நாட்டிற்கும் சிறப்பு அந்தஸ்தை வழங்கக் கூடாது என்று CPC கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசியல் கட்சிகளுடனான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதியமைச்சர் சன் ஹையன் தலைமையிலான CPC குழு பிரேமதாசவையும் இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தது.

கூட்டத்தில், சஜித், வெளிப்படையாக இந்திய-சீனா மோதலைக் குறிப்பிடுகையில், ஒரு அரசியல் தலைவர் என்ற வகையில், இரண்டு ஆசிய ஜாம்பவான்களுக்கு இடையில் ஒரு மத்தியஸ்த பாத்திரத்திற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

சகல நாடுகளுடனான தொடர்புகளில் இலங்கை எப்போதும் சமனாக இருக்க வேண்டும் என்றும் எந்தவொரு நாட்டிற்கும் சிறப்பு அந்தஸ்தை அளிக்க கூடாது என்றும் சன் பதிலளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தலைவர்களில், அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா 1962 இந்திய-சீனப் போரின் போது இத்தகைய பங்கை ஆற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1962 டிசம்பரில் கொழும்பில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு அவர் முன்முயற்சி எடுத்தார்.

இந்தியாவும் சீனாவும் இலங்கையில் போட்டி மூலோபாய நலன்களைக் கொண்டுள்ளன மற்றும் பிராந்திய செல்வாக்கிற்காக போட்டியிடுகின்றன. அது இலங்கையை இராஜதந்திர கயிற்றில் நடக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.

CPC தூதுக்குழு சமீபத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உட்பட அனைத்து முக்கிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .