2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அந்தரங்க படங்களை பகிர முயன்ற இருவர் கைது

Simrith   / 2025 ஏப்ரல் 09 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விநியோகிப்பதாகக் கூறி தனிநபர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் தனித்தனி பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு-கோட்டையில், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதாக மிரட்டி ரூ.222,000 பெற்ற 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இது தொடர்பாக 2025 ஜனவரியில் முறைப்பாடு ஒன்று கிடைத்தது. அதனடிப்படையில், பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த சந்தேக நபரை நேற்று மதியம் பொலிஸார் கைது செய்தனர்.

இதற்கிடையில், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புவதாக மிரட்டிய குற்றச்சாட்டில் பண்டாரகமவைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 2025 ஜனவரியில் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்று கிடைத்தது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் நேற்று கஹதுடுவ பகுதியில் கைது செய்யப்பட்டார். 

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X