2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அனுமதி கொடுத்தது யார்?’

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சகல அரச பணியாளர்களையும் கடமைகளுக்கு அழைத்துள்ள அரசாங்கம், சுகாதாரப் பிரிவினரின் ஆலாசனைக்கு அமையவா இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது எனக் கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்,யாருடைய அனுமதியுடன் அழைக்கப்பட்டனர் என்பதை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதுடன், இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. இந்நிலையில், அரச பணியாளர்களை கடமைகளுக்கு அழைத்து, நாட்டைத் திறப்பதன் ஊடாக அரசாங்கம் எதனை எதிர்பார்க்கின்றது என்பது புரியவில்லை” என்றார்.

“சுகாதாரப் பிரிவுகளின் ஆலோசனைகளைக் கவனத்தில் எடுக்காமல், தாம் நினைத்ததை செயற்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்த அவர், “சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கியுள்ளதால், ஆணைக்குழு ஒன்றை நியமித்து, சகல தரிப்பினரதும் சம்பளப் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .