Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Janu / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளை செய்கின்றது” என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது
யாழ். ஊடக அமையத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலளர் செ.சிவசுதன் செவ்வாய்க்கிழமை (29) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
“ இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து உழைப்பளர் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது
ஆசிரியர் மற்றும் அத்துறைசார் தரப்பினரது ஊதியம் அதிகதிப்பு, கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது, மக்களின் காணி நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மேதின பேரணியானது வரும் 1 ஆம் திகதி முற்பகல் இடம்பெறவுள்ளது.
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த மேதினப் பேரணியானது யாழ். நகரின் பிரதான சாலைகளூடாக பேரணியாக சென்று யாழ். பொது நூலகம் முன்பாக ஒன்று கூடி பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது. ”
மேலும் குறித்த பேரணியில் அனைத்து துறைசார் தரப்பினரும் ஆதரவை வழங்கி குறித்த பேரணியை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
2 hours ago
5 hours ago