Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 19 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாலியவெவ பிரதேசத்தில் இளைஞர் குழுவொன்றால் தயாரிக்கப்பட்டிருந்த 500 வெசாக் கூடுகள் அடங்கிய தொகுதியொன்று, சாலியவெவ பிரதேசத்தில் காட்சிபடுத்துவதற்கு, அங்கு பொலிஸார் அனுமதியளிக்காத நிலையில், குறித்த வெசாக் கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (18), சாலியவெவ பிரதேசத்தில் பௌத்த மற்றும் கத்தோலிக்க இளைஞர்கள் இணைந்து வெசாக் கூடு தொகுதியொன்றை தயார் செய்திருந்த நிலையில், அவற்றில் ஒரு புறம் பௌத்தர்களின் சின்னமும் மறுபுறம் கத்தோலிக்கர்களின் சிலுவை சின்னமும் பொறிக்கப்பட்டமையால் அங்கு முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.
இதன்பின்னர் பொலிஸாரால் குறித்த வெசாக் கூடுகளை காட்சிபடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மேலும் முரண்பட்டுக்கொண்ட இளைஞர்கள், தாம் தயாரித்த வெசாக் கூடுகளை வீதியில் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago