2025 ஜூலை 16, புதன்கிழமை

அனைத்து மாவட்டங்களுக்கும் மின்சார, நீர் பிரச்சினை சேவைகள்

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தின் போது, மின் அமைப்புகள் உள்ளிட்ட குழாய் பிரச்சினைகளுக்கான சிறப்பு சேவைகள் அனைத்தும், இலங்கையிலுள்ள மற்றைய மாவட்டங்களுக்கும், திங்கட்கிழமை (20) முதல் நீட்டிக்கவுள்ளதாக, இலங்கை பொது பயன்பாட்டு ஆணையகம், இன்று (19) தெரிவித்தது.

இந்தச் சேவை, பொலிஸ், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, மிழன்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழு  ஆகியற்றின் இணைந்த செயற்பாட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்தச் சேவை, மேல் மாகாணத்திலும் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில், ஏப்ரல்மாத ஆரம்பத்தில் இருந்து முன்னடுக்கப்பட்டு வருகின்றன.

வீடுகளில் காணப்பட்ட மின்சாரப் பிரச்சினைகள், நீர் சேவைகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் இந்தச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்நிலையிலேயே, இந்தச் சேவை நாளை (20) முதல், அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X